காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வுகள்   நிவா­ர­ணத்­தினை  எதிர்­பார்க்­க­வில்லை;நீதியையே எதிர்பார்க்கின்றனர்- நளிந்த ஜய­திஸ்ஸ

காணா­ம­லாக்­கப்­பட்­டோரின் உற­வுகள் அர­சாங்­கத்­திடம் இருந்து  நிவா­ர­ணத்­தினை  எதிர்­பார்க்­க­வில்லை மாறாக  உண்­மை­யான தீர்­வி­னையே எதிர்­பார்க்­கின்­றார்கள்.யுத்த  காலத்தில்  காணாமல் போனோரை எவ்­வாறு கொண்டு வரு­வது என்று பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ குறிப்­பிட்­டுள்­ளமை காணா­ம­லாக்­கப்­பட்­டுள்­ளோ­ரது உற­வி­னர்­க­ளது எதிர்­பார்ப்­பினை  அவ­ம­திப்­ப­தா­கவே  கரு­தப்­படும். என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  நளிந்த ஜய­திஸ்ஸ தெரி­வித்தார்.

இது குறித்து அவர்  மேலும் குறிப்­பி­டு­கையில்,

யுத்த  காலத்தில்  காணாமல் போனோரை எவ்­வாறு கொண்டு வரு­வது என்று பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ குறிப்­பிட்­டுள்­ளமை காணா­ம­லாக்­கப்­பட்­டுள்­ளோ­ரது உற­வி­னர்­க­ளது எதிர்­பார்ப்­பினை  அவ­ம­திப்­ப­தா­கவே  கரு­தப்­படும்.  யுத்த காலத்­திலும் அதற்கு பிற்­பட்ட காலத்­திலும் நபர்கள் வலிந்து காணா­ம­லாக்­கப்­பட்­டுள்­ளமை   சாதா­ர­ண­மா­கவே  காணப்­பட்­டுள்­ளது. ஆகவே நபர்­களை  காணா­ம­லாக்­கிய மஹிந்த  ராஜ­பக்ஷ தரப்­பிடம்    காணா­ம­லாக்­கப்­பட்­டோ­ரது உற­வுகள் நீதியை  எதிர்­பார்ப்­பது  சாத்­தி­ய­மற்­றது. காணா­ம­லாக்­கப்­பட்­டோ­ருக்கும், அவர்­களை   எதிர்­பார்த்­தி­ருக்கும் உற­வு­க­ளுக்கும்  எமது  ஆட்­சியில்  தீர்வு பெற்றுக் கொடுக்­கப்­படும்.

காணா­ம­லாக்­கப்­பட்­டோ­ரது உற­வு­க­ளுக்கு அர­சாங்கம் நிவா­ர­ணத்­தினை மாத்­திரம் வழங்­கினால் தீர்வு  கிடைத்து விடும் என்­பது தவ­றாகும்.  காணா­ம­லாக்­கப்­பட்­டோ­ரது உற­வுகள் அர­சாங்­கத்தின் நிவா­ர­ணங்­களை  எதிர்­பார்க்­க­வில்லை மாறாக  தங்­களின் உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை உண்­மை­யாக அறிந்துக் கொள்­ளவே போரா­டு­கின்­றார்கள். அது  அவர்­களின் உரி­மை­யாகும்.

தேசிய  மக்கள் சக்­தியின்   தேர்தல் கொள்கை பிர­க­ட­னத்தில் காணா­ம­லாக்­கப்­பட்­டோ­ருக்கும், யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கும்  நீதி  கிடைக்கும்   பொறி­மு­றைகள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. யுத்த குற்ற விசா­ர­ணைகள்  சுயா­தீ­ன­மான முறையில் இடம் பெற வேண்டும். அந்த விசா­ர­ணைகள்  இரா­ணு­வத்­தி­ன­ருக்கு மாத்­தி­ர­மல்ல    விடு­தலை புலிகள் அமைப்பின் மீதும் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். அதுவே நியா­ய­மா­ன­தாகும்.

10 வருட  ஆட்சி  காலத்­திலும் தமிழ் – முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரா­கவும்,   குறிப்­பாக தமிழ் மக்­களின் உரி­மை­க­ளுக்கு எதி­ரா­கவும்  செயற்­பட்ட முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பய ராஜ­பக்ஷ  தற்­போதும் தமிழ் சமூ­கத்தின் விட­யத்தில் எவ்­வி­த­மான  மாற்­றங்­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை. ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக  போட்­டி­யிடும் தரு­ணத்­திலும்  தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக பகி­ரங்க  கருத்­துக்­களும், தனி பௌத்த  சிங்­கள வாக்­கு­களை மாத்­திரம் எதிர்­பார்த்த போக்கும் நன்கு புலப்­ப­டுத்­து­கின்­றன.  இவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் நப­ருக்கு தமிழ் அர­சி­யல்­வா­திகள் இன்றும்    ஆத­ர­வாக செயற்­ப­டு­வது  தன் இனத்தின் மீது  கொண்­டுள்ள அக்­க­றை­யின்­மை­யினை வெளிப்­ப­டுத்­து­கின்­றது.