உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல்கள் இடம்பெறப்போகின்றன என்பது அனைத்து அரசியல்வாதிகளிற்கும் தெரிந்திருந்தது என பாதிக்கப்பட்ட ஒருவர் ஜனாதிபதியின் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நேற்று நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி கிறிஸ்தவ தேவாலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாக உரையாடியவேளை பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அவ்வேளை பாதிக்கப்பட்ட ஒருவர் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல் இடம்பெறப்போகின்றது என்பது அனைத்து அரசியல்வாதிகளிற்கும் தெரிந்திருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி, மிக முக்கியமான சில அரசியல்வாதிகளின் விசேட பாதுகாப்பு பிரிவினருக்கு மாத்திரம் தாக்குதல் இடம்பெறலாம் என தகவல் வழங்கப்பட்டிருந்தது எனக்கும் எனது சகாக்களுக்கும் அவ்வேளை விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை என்றார்.



