இலங்கை மண்ணில் இந்தியாவுக்கு எதிரான எந்த செயல்பாடுகளையும் அனுமதிக்க மாட்டோம் என்று ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தெரிவித்தார் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த 4ம் திகதி இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கைவை சந்தித்து இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இதில் இலங்கையின் வளர்ச்சிக்கு இந்தியாவின் பொருளாதார உதவிமிக முக்கியமானது என்று அநுர தெரிவித்த நிலையில், இலங்கையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து பங்களிப்பையும் இந்தியா வழங்கும் என்று ஜெய்சங்கர் உறுதியளித்தாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இந்தச் சந்திப்பு குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா – இலங்கை இடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேசப்பட்டது. இலங்கை மண்ணில் இந்தியாவுக்கு எதிரான எந்த செயல்பாடுகளையும் அனுமதிக்க மாட்டோம் என்று ஜனாதிபதி அநுர தெரிவித்ததாகவும் இலங்கையின் வளர்ச்சிக்கு இந்தியா உதவும் என்று ஜெய்சங்கர்உறுதியளித்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தும் ஜெய்சங்கர் தனது கருத்துக்களை முன்வைத்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது இந்த பயணத்தில் தமிழ் தரப்புக்களை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.