நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றம் தேர்தல்!

பாராளுமன்றத்தை இன்று 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கையொப்பமிடப்பட்டு, அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றம் தேர்தல் நடத்தப்படவுள்ளது. பாராளுமன்றம் தேர்தலுக்காக ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை வேட்புமனு தாக்கல் இடம்பெறும்.

இதனை அடுத்து நவம்பர் 14 ஆம்  திகதி தேர்தல் நடத்தப்படுவதுடன், நவம்பர் 21 இல் புதிய பாராளுமன்றம் கூடுவுள்ளமை குறிப்பிடத்தகது.