கோட்டாவின் இடங்களை கைப்பற்றிய அனுரகுமார: 15 மாவட்டங்களில் முன்னிலையில்

வெளியாகியிருக்கும் நாடளாவிய ரீதியிலான வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.

அதாவது  முதல் சுற்று முடிவின் அடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் அனுரகுமார திஸாநாயக்க முன்னிலை வகிக்கின்றார்..

அதனடிப்படையில் அனுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், புத்தளம், கம்பஹா, கேகாலை, கண்டி, மாத்தளை, கொழும்பு, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய 15 மாவட்டங்களில் திஸாநாயக்க முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

சஜித் பிரேமதாச ஏனைய 7 மாவட்டங்களான நுவரெலியா, பதுளை, திகாமடுல்ல, மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் முன்னிலை வகிக்கின்றார்.

2019 தேர்தலில் சஜித் வெற்றிபெறாத பதுளை மாவட்டத்தில் இம்முறை முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல்,2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை வகித்த 16 மாவட்டங்களில் ஒன்றைத் தவிர 15 மாவட்டங்களிலும் அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 4,363,035 வாக்குகளைப் பெற்று 2 ஆவது இடத்தில் உள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளைப் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளார்.