இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல்: PAFFREL அமைப்பு கருத்து

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தலாக இடம்பிடிக்குமென சுதந்திரமானதும் மற்றும் நியாயமானதுமான தேர்தலுக்கான (PAFFREL) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

தேர்தலின்போது அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமையும் குறைவு என சுட்டிக்காட்டிய அவர் பொலிஸ் மா அதிபர் நாட்டில் இல்லாதபோதும் தேர்தல்களை நடத்துவதற்கு பொலிஸார் தம்மால் இயன்ற ஆதரவை வழங்கியதாகவும் கூறினார்.

மேலும் இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் 75% முதல் 80% வரையிலான வாக்குகள் பதிவாகியுள்ளதாக பஃவ்ரல் தெரிவித்துள்ளது.