கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி: காணாமல் ஆக்கப்பட்டவர்களுடையதா?

இலங்கையில் இதுவரை 22 மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ள  நிலை யில், தற்போது கொழும்பின் பிரதான பகுதியும், அதிவுயர் பாது காப்பு வலயமுமான பகுதி ஒன்றில் மனிதப் புதைகுழி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை மாதம் 13ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்குள் செல்லும் இங்குறுகடை சந்தியி லிருந்து நிர்மாணிக்கப்படும் வீதி அபிவிருத்தி பணிகளுக்காக இடம் பெற்ற அகழ்வு நடவடிக்கைகளின் போதே இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த விடயம் தொடர்பில் கொழும்பு புதுக்கடை பிரதம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, பிரதம நீதவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில் கடந்த 5ஆம் திகதி அகழ்வுப் பணிகள் ஆரம்பிக் கப்பட்டன.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை இந்தப் புதைகுழியில் புதைத்திருக் கலாம் என்ற சந்தேகத்தை வெளிப்படித்தியுள்ளனர்.

‘’இந்த இடத்தில் கடற்படை முகாமொ ன்று இருந்தது. துறைமுக  காவல்துறை என்பது 1988 மற்றும் 1989ஆம் ஆண்டு காலப் பகுதி மற்றும் போர் இடம்பெற்ற காலப் பகுதியில் சந்தேக நபர்களைத் தடுத்து வைக்கும் ஒரு இடமாகப் பிரபல்யமடைந்து காணப்பட்டது.

இதனாலேயே, இந்த மனி தப் புதைக்குழி 1988 மற்றும் 1989ஆம் ஆண்டு காலப் பகுதிக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம்” என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஆனால் இது வரையில் இந்த புதை குழு எந்த காலப் பகுதிக்குறியது என கண்டு பிடிக்க முடியவில்லை எனக் கூறப்படுகின்றது.