பொதுஜன பெரமுன – 14 கட்சிகளுக்கிடையிலான ஒப்பந்தம் கைச்சாத்தாகியது

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், 14 சிறிய கட்சிகளுக்குமிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று(14) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ரெலோ (சிறி), இலங்கை மக்கள் தேசியக் கட்சி, ஜனதா கட்சி, ஐக்கிய மக்கள் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், புதிய ஜனநாயக மக்கள் முன்னணி, தேசபக்தி ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக மக்கள் கட்சி, ஜனநாயக சோசலிசக் கட்சி, மற்றும் இஸ்லாமிய சோசலிச முன்னணி உட்பட 14 கட்சிகளே உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.

குறித்த நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபயா ராஜபக்ஸ, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள 14 கட்சிகளும் இதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஜி.எல்.பீரிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 13 அம்சக் கோரிக்கையை சஜித் பிரேமதாசா ஆதரித்தமையாலேயே இலங்கை தமிழரசுக் கட்சி அவரை ஆதரிக்க முன்வந்தது. ஆனால் கூட்டமைப்பின் இந்தத் திட்டம் நாட்டிற்கு நல்லதல்ல என்றும் தெரிவித்தார்.