இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியை சாதகமாகப் பயன்படுத்த விரும்பவில்லை – சீனா

இலங்கை கடற்பரப்பில் கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு சீன கப்பல்களிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறித்து அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள சீனா, சில நாடுகள் இது தங்களிற்கு கிடைத்த வெற்றி என கருதுகின்றன ஆனால் உண்மை அதுவல்ல என குறிப்பிட்டுள்ளது.

மூன்றாம் தரப்பொன்றின் அழுத்தம் காரணமாகவே இலங்கை இந்த நடவடிக்கையை எடுத்தது என குறிப்பிட்டுள்ள இலங்கைக்கான சீன தூதரக அதிகாரி யன்வெய் சூ, சில நாடுகள் இதனை தமக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றி என  கருதுகின்றன,ஆனால் இலங்கையின் நெருக்கடியான நிலைமையை பயன்படுத்த விரும்பாததால் நாங்கள் அமைதியாகயிருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

சீனா இலங்கையின் சுதந்திரம் இறைமையை மதிக்கின்றது என மேலும் தெரிவித்துள்ளார்.