பொதுவேட்பாளரை ஆதரித்து வடமராட்சியில் பரப்புரை கூட்டம்!

Unknown 2 4 பொதுவேட்பாளரை ஆதரித்து வடமராட்சியில் பரப்புரை கூட்டம்!

தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேந்திரனை ஆதரித்து யாழ்.வடமராட்சியில் நேற்று (10) செவ்வாய்க்கிழமை மாலை பரப்புரை கூட்டம் இடம்பெற்றது.

வடமராட்சி, மாலுசந்தி மைக்கல் விளையாட்டு மைதானத்தில் வைத்தியர் சி.சிவகுமார் தலைமையில் நேற்று மாலை 4 மணிக்கு குறித்த பரப்புரை கூட்டம் ஆரம்பமாகி இடம்பெற்றது.

Unknown 11 பொதுவேட்பாளரை ஆதரித்து வடமராட்சியில் பரப்புரை கூட்டம்!

கூட்டத்தில், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான பா.கஜதீபன் மற்றும் விந்தன் கனகரட்ணம், அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம், வடமாகாண கடலோடிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் க.அண்ணாமலை, முன்னாள் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.