தமிழ்ப் பொது வேட்பாளருக்கே ஆதரவு : நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவிப்பு

இலங்கைத் தீவில் சிறிலங்காவின் அரசுத் தலைவர் தேர்தலை மையப்படுத்தி, தமிழர் தேசத்தினால் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டிருக்கிறது.

விடுதலை அரசியலின் முனைப்பாக தேசமாக, தேசிய இனத்தின் திரட்சியாக, சங்கு சின்னத்திற்கு மட்டும் வாக்களிக்குமாறு இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களை, மற்றும் வாக்களிக்க தகுதியுள்ள புலம்பெயர்  தமிழர்களை உரிமையோடு வேண்டுகின்றோம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்ரெம்பர் 7ம் நாள் சனிக்கிழமை, நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் இது தொடர்பான கருத்தாடல் இடம்பெற்றிருந்ததோடு, ஏகமனதாக இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.