தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கும் பாரிய பொறுப்பு ரணிலுக்கு இருக்கு: தமிழரசு கட்சி தெரிவிப்பு

வடக்கில் ஒரு போதும் தீர்க்கப்படாத தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கும் பாரிய பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இருப்பதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணிலுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அந்த கட்சியின் தலைவர் மாவைசேனாதி ராஜா இதனை தெரிவித்துள்ளார்.

‘எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்  தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வடக்கில் ஒரு போதும் தீர்க்கப்படாத தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கும் பாரிய பொறுப்பு உள்ளது எனவும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களை மீள அபிவிருத்தி செய்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இரண்டு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்ட ஜனாதிபதி, காங்கேசன்துறையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.