இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் மன்னார் மாவட்டத்திற்கான கிளையை ஸ்தாபிப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள தனியார் மருந்தகங்களில் மருந்துகள் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் மக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மல நாதனின் கோரிக்கைக்கு அமைவாக அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் கிளையை மன்னாரில் ஆரம்பிப்பதற்கான காணி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னார் நகரப் பகுதியில் பொதுமக்கள் மிகக் குறைந்த விலையில் மருந்துகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் மாவட்ட செயலக வளாகத்தில் குறித்த கிளை ஆரம்பிக்கப்படவுள்ளது.