தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டு, நந்திக்கடல் மண் அவரது பேழையில் வைக்கப்பட்டு, தமிழின விடிவிற்காக நீண்டகாலமாகப் பாடுபட்டுவந்தவரும் அனைத்துலக மனித உரிமைகளின் அமைப்பின் தலைமை இயக்குனருமாகிய திரு.விராஜ் மென்டிஸ் அவர்களின் வணக்கநிகழ்வு யேர்மனியில் நடைபெற்றது.
கடந்த மாதம் 16 நாள் உடல் நலக்குறைவு காரணமாக திரு.விராஜ் மென்டிஸ் அவர்கள் ஜேர்மனியில் காலமானார், அவரது இறுதி நிகழ்வுகள் கடந்த 31ம் திகதி நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் தமிழர் தாயகப் பகுதியான வடமராட்சியில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் பொது மக்கள் திரு.விராஜ் மென்டிஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.