தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு : தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி கிளை தீர்மானம்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையில்  விசேட தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் உபதலைவரும், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சருமான தம்பிராசா குருகுலராஜா தலைமையில் மாவட்டக் கிளை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்களின் பங்கேற்போடு நடைபெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.