யாழ்ப்பாணத்தில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தினத்தை அடையாளப்படுத்தி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாண தலைமையக காவல்துறையினர் யாழ். நீதவான் நீதிமன்றில் விடுத்த வேண்டுகோளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று நிராகரித்துள்ளது.
இந்த தடையுத்தரவு விண்ணப்பத்திற்கான வழக்கு விசாரணை நேற்று வியாழக்கிழமை (29) யாழ். நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வேளையிலேயே நீதிமன்றம் காவல்துறையினர் செய்த விண்ணப்பத்தினை நிராகரித்துள்ளது.