ஜனாதிபதித் தேர்தல்: கிளிநொச்சியில் தொடரும் தமிழ்ப்பொது வேட்பாளரின் ‘நமக்காக நாம்’ பிரசார பயணம்!

PHOTO 2024 08 29 14 14 58 ஜனாதிபதித் தேர்தல்: கிளிநொச்சியில் தொடரும் தமிழ்ப்பொது வேட்பாளரின் 'நமக்காக நாம்' பிரசார பயணம்!

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் ஜனதிபதி தேர்தல் 2024 இல் தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ‘நமக்காக நாம்’ பிரசார பயணம் கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் பேராதரவுடன் மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

PHOTO 2024 08 29 11 54 46 ஜனாதிபதித் தேர்தல்: கிளிநொச்சியில் தொடரும் தமிழ்ப்பொது வேட்பாளரின் 'நமக்காக நாம்' பிரசார பயணம்! ‘பொலிகண்டி முதல் பொத்துவில் வரை’ முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பிரசார பயணத்தின் தொடர்ச்சியாக கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 27 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

‘நமக்காக நாம்’ பிரசார பயணத்தின் ஆறாவது நாளான இன்று(29) வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு தேர்தல் பரப்புரைகள் ஆரம்பிக்கப்பட்டன. கிளிநொச்சி காக்கா கடை சந்தியில்  ஆரம்பமாகிய மூன்றாவது நாள் பிரசார பயணத்தின் போது பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் ஒன்று கூடி ஆதரவு தெரிவித்திருந்தனர்.

PHOTO 2024 08 29 11 54 47 ஜனாதிபதித் தேர்தல்: கிளிநொச்சியில் தொடரும் தமிழ்ப்பொது வேட்பாளரின் 'நமக்காக நாம்' பிரசார பயணம்!

தொடர்ந்து வட்டக்கச்சி மாயவனூர் பகுதியலும் பெருமளவான மக்கள் திரண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தருமபுரம், பரந்தன் சந்தி ஊடாக பயணித்து கிளிநொச்சி நகர் பகுதியில் பரப்புரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மூன்றாவது நாள் நிறைவு செய்யப்பட உள்ளது.