வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பி.க்களுடன் நடந்த கலந்துரையாடல்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை ராமன்ய மகா பீட மகாநாயக்க தேரருக்கு விளக்கமளித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் தனது தேர்தல் பணிகளை ஆரம்பித்த பின்னர், ராமன்ய மகா நிகாயவின் மகா நாயக தேரரரைச் சந்தித்தார். இதன்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பி.க்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்கள் குறித்தும் ஜனாதிபதி, மகாநாயக்க தேரருக்கு தெரிவித்துள்ளார்.