தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்ப் பொது வேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரனுக்கு பளையில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. ‘பொலிகண்டி முதல் பொத்துவில் வரை’ முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பிரசார பயணத்தின் நான்காவது நாள் பரப்புரை நடவடிக்கை இன்று நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்தி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அங்கிருந்து சாவகச்சேரி, கொடிகாமம் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்திற்கு சென்ற பொதுவேட்பாளர் தனது பரப்புரையை ஆரம்பித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட பரப்பரைக் குழுவின் ஏற்பாட்டில் இத்தாவில் சந்தியில் பொது வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டிருந்ததுடன் கலை நிகழ்வுகளோடு, வரவேற்று அழைத்துச் செல்லப்பட்டார். பளை பேருந்து நிலையத்தில் வரவேற்பு நடனமும் உரைகளும் இடம் பெற்றன. இதன்போது சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிககள், மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்படத்தக்கது.