திருகோணமலை மாவட்டத்தில் கடந்த நல்லாட்சி அரசாங்கத் தில் அமைக்கப்பட்ட பல வீட்டுத் திட்டங்கள் இடைநடுவில் கை விடப்பட்டு பாழடைந்தும் முடிவில்லா பிரச்சினைகளாக காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த வீட்டுத் திட்டங்களானது திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளிலும் அமைக்கப்பட்டது. இதில் அத்தி வாரமிடப்பட்ட பல வீடுகளும், இடை நடுவில் கைவிடப்பட்ட நிலையிலும் காணப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும் இருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அப்போ தைய வீடமைப்பு அமைச்சராக இருந்த சஜீத் பிரேமதாச அவர்களால் குறித்த வீடமைப்புத் திட்டங்கள் அமைக்கப்பட்டன. இருந்தும் ஆட்சிமாற்றம் காரணமாக கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின் அனைத்து அபிவிருத்தி வேலைகளும் கைவிடப்பட்ட நிலையில் பாழடைந்து காணப்படுகிறது.
இதனால் வீட்டுத் திட்டங்களை நம்பிய மக்கள் ஏமாற்ற மடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். குறித்த திட்டங்களை வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினர் முன்னெடுத்திருந்தனர்.
தற்போதைய எதிர்க்கட்சி தலைவராக இலங்கை நாடாளுமன்றத்தில் செயற்படும் சஜீத் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். எதிர்காலத்தில் ஜனாதிபதியானால் கைவிடப்பட்ட வீட்டு திட்டங்கள் அனைத்தும் முழுமையாக பூரணப்படுத்தப் படுமா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்




