இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கும் அவுஸ்திரேலியா!

அவுஸ்திரேலிய நிறுவனமான யுனைடெட் பெட்ரோலியம் பிரைவேட் லிமிடெட், இலங்கையில் அதன் செயல்பாடுகளைத்  ஆரம்பிக்க உள்ளது.

இதன்படி, எதிர்வரும் 28ஆம் திகதி முதல் இந்நிறுவனம் செயற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிறுவனத்தின் எரிபொருள் கப்பல்கள் ஏற்கனவே இலங்கை வந்துள்ளதுடன், அவற்றை இறக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலிய நிறுவனம் 20 எரிவாயு நிலையங்களில் தனது செயல்பாடுகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாகனங்கள், குறிப்பாக உயர்தர சொகுசு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் செயல்திறனை மேம்படுத்த உதவும் XP100 தரமதிப்பீட்டு எரிபொருள் எனப்படும் 100 ஒக்டேன் பிரீமியர் பெட்ரோல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 100 ஒக்டேன் பிரீமியர் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை சாதாரண எரிபொருள் விலையைவிட மிக அதிகமாக இருக்குமென இந்தியன் ஒயில் கோப்பரேஷனின் (IOC) நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 793 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வகை எரிபொருளை ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.