தெரிவு செய்யப்படவுள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதியிடம் ஐ.நா அலுவலகம் வேண்டுகோள்?

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றை மேம்படுத்துவதற்கும் தேவையான அடிப்படையான அரசியல் யாப்பு மற்றும் நிறுவனரீதியான சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் மனித உரிமைநிலவரம்  குறித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் முழுமையான அறிக்கையிலேயே  இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

தேர்தல்களையடுத்து புதிதாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி ஒரு அவசரவிடயமாக இலங்கை நாட்டுக்கென அனைவரையும் அரவணைக்கும்  முன்னெடுக்கும் தேசிய நோக்கினை முன்னெடுக்கவேண்டும்.

அத்தோடு முரண்பாடுகளிற்கான மூல காரணங்களை கவனத்தில் எடுத்து ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கும்,அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கும்,பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றை மேம்படுத்துவதற்கும் தேவையான அடிப்படையான அரசியல் யாப்பு மற்றும் நிறுவனரீதியான சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் என்பவற்றை அண்மித்திருக்கும் நிலையில், 2022 ஆண்டில் எதிர்ப்பு தெரிவித்த இலங்கையர்களின் அனைத்து தரப்புகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் பரந்துபட்ட தரப்பினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலைமாற்றுகால நீதிக்கான தன்னை மீண்டும் அர்ப்பணித்துக்கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்திருக்கின்றது.