திருகோணமலை: 43ஆயிரம் ஏக்கர் விவசாய காணிகள் அபகரிப்பு

திருகோமமலை மாவட்டத்தில் மொத்தமாக 43ஆயிரம் ஏக்கர் விவசாய காணிகள் எல்லையிடப்பட்டு அபகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதியிடம் பேசிய போது உரிய அமைச்சர்களுடன் பேசி  தீர்வை பெற்றுத்தருவதாக தெரிவித்தார் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை,புல்மோட்டைப்  பகுதியில் தமிழ் முஸ்லிம் மக்களுடனான சந்திப்பொன்று நேற்று (16) இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் 10435 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் விவசாய நிலங்களுக்கான குளங்கள் வாய்க்கால்கள் காணப்படுகிறது. இது தொடர்பில் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து உரிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்காக முயற்சிப்பதாக தெரிவித்தார்.

மேலும் ஆசிரியர் வெற்றிடங்கள் 500ம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் 100 சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகிறது இதனால் சத்திர சிகிச்சைகள் தள்ளிப்போடப்படுகின்றன வெளிநாடுகளில் வைத்தியர்கள் இல்லாமல் அறுவை சிகிச்சை இடம் பெறுகின்ற போதும் இங்கு சிற்றூழியர்கள் உதவிக்காக இன்மையால் பிற்போடப்படுகிறது. கல்வி சுகாதாரம் சமூக மேம்பாடு உள்ளிட்ட விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு கட்சி வேறுபாடுகளின்றி ஒன்றினைந்து செயற்படுவோம் என்றார்.