மன்னார் வைத்தியசாலையில் இளம் தாய் மரணம்: ஜனநாயக போராட்டத்திற்கு அழைப்பு

மன்னாரில், போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இளம் தாய் சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கேட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஜனநாயகப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி உயிரிழந்த திருமதி சிந்துஜா மரியராஜின் மரணம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணைகள் நடைபெற்று ஒரு வாரம் கடந்த போதும் இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

எனவே குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க நினைக்கும் மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக சிந்துஜாவிற்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற உள்ளதால் இப் போராட்டத்தில் தார்மீக அடிப்படையில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.