கிண்ணியாவில் ஐஸ் போதை பொருளுடன் பெண் ஒருவர் கைது

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர் பகுதியில் ஐஸ் போதை பொருளுடன் பெண் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கூபா நகர் கிண்ணியா_03 ஐ சேர்ந்த வயது (34) குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் இவரிடமிருந்து 11கிராம் ஐஸ் போதை பொருள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவலைப்பில் குறித்த பெண்ணை சோதனையிட்ட போது அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த ஐஸ் போதை பொருளை மீட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். முன்னரும் போதை பொருளில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

குறித்த பெண் போதை பொருள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்