தோ்தலில் போட்டியிடப்போவதில்லை – பசில் ராஜபக்ஷ அறிவிப்பு

தேர்தலில் போட்டியிட எண்ணம் தமக்கு இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

நேரடி அரசியலில் பங்குபற்றும் நோக்கம் இல்லை எனவும் கட்சி மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் விரும்பும் பட்சத்தில் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள தாம் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கோட்டாபயவை பதவியிலிருந்து நீக்குவதற்கு குடும்பத்தாரின் சதி என ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அவ்வாறான ஒரு தேவை எமக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நேர்காணலில் பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது தடுமாறிய பசில் நழுவல் போக்கில் பதில்களை அளித்திருந்தார்.

“கோட்டா கோ கம” ஆர்ப்பாட்டத்தினையடுத்து அமெரிக்காவிற்குச் சென்றிருந்த பசில் ராஜபக்ச, அண்மையில் நாடு திரும்பியிருந்தார். இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.