தோணி கவிழ்ந்ததில் இருவர் பலி

IMG 20240214 WA0012 தோணி கவிழ்ந்ததில் இருவர் பலி
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு பகுதிதை சேர்ந்த இருவர் தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.இச் சம்பவம் இன்று சிறியால் ஓடை பகுதியில் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் கிண்ணியா ஈச்சந்தீவு சின்னத்தோட்டம் பகுதியை சேர்ந்த ஆயிஸ் ரூபன் வயது (17) ,புஷ்பகுமார் வயது (42) எனவும் தெரியவருகிறது.

இருவரும் கடலுக்கு சென்ற நிலையில் தோணி கவிழ்ந்ததில் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரிதவருகிறது. 17வயதான இளைஞன் உட்பட மற்றொருவரும் உயிரிழந்துள்ளனர்.

IMG 20240214 WA0010 தோணி கவிழ்ந்ததில் இருவர் பலிஇவ்வாறு உயிரிழந்தவர்டளின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.