திருகோணமலையில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவு தினம்

20240124 200713 திருகோணமலையில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவு தினம்திருகோணமலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 18வது ஆண்டு நினைவு தினம் நேற்று புதன்கிழமை (24) மாலை 5 .30 மணிக்கு திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள அவர் படுகொலை செய்யப்பட்ட உட்துறைமுக வீதிக்கு அருகில் இடம் பெற்றது.

அகரம் அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நினைவு நிகழ்வில் சுகிர்தராஜனுக்கு அஞ்சலி நிகழ்வும் சுடர் ஏற்றும் நிகழ்வும் இடம் பெற்றது.

20240124 200757 திருகோணமலையில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவு தினம்குறித்த அஞ்சலி நிகழ்வில் ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் சுகிர்தராஜனின் ஊடக செயற்பாட்டை பாராட்டி சிறப்புரையாற்றினர்.