ஐந்து வருடங்களுக்குள் பலஸ்தீன அரசை நிறுவுவதே இலங்கையின் முன்மொழிவாக உள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், பலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைகளை பாதுகாக்க வேண்டும். சுயாதீனமானதும் – சுதந்திரமானதுமான உரிமைகளைப் பறிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
பலஸ்தீன வெளிவிவகார மற்றும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான அமைச்சர் கலாநிதி ரியாட் மல்கியை ஜனாதிபதி ரணில் நேற்று சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். உகண்டாவின் கம்பாலா நகரில் நேற்று ஆரம்பமான ஜி -77 சர்வதேச மாநாட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
காஸா போர் நெருக்கடி குறித்து அதிகம் கவனம் செலுத்தப்பட்ட இந்த சந்திப்பில், இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் பலஸ்தீனத்தில் உள்ள அப்பாவிமக்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது. காஸா பகுதியில் மோதல்களைதடுத்து சமாதானத்தை நிலைநாட்ட ஐ.நா. செயலாளர் நாயகத்தின் வேலைத் திட்டத்துக்கு இலங்கை பூரண ஆதரவை வழங்கும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், 5 வருடங்களுக்குள் பலஸ்தீன அரசை நிறுவுவதே இலங்கையின் முன்மொழிவாக இருக்கிறது. அத்துடன், பலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைகளை பாதுகாக்க வேண்டும். சுயாதீனமானதும் – சுதந்திரமானதுமான உரிமைகளைப் பறிக்க முடியாது என்ற விடயத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியிருந்தார்.