நீதிபதி விலகல் – ரணில் பதில் தரவேண்டும் – மனோ

சட்டத்தின் ஆட்சி என்பது “அதிகார பகிர்வு”, “பொறுப்புக்கூறல்” என்பன போன்ற மாற்றுக்கருத்துகள் கொண்ட விஷயமல்ல.

இங்கே நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல். நாட்டில் எஞ்சி இருந்த கொஞ்ச நஞ்ச “சட்ட ஆட்சிக்கும் நேரடி சவால். ஜனாதிபதி ரணில், உடன் நாடு திரும்பி பதிலளிக்க வேண்டும். சட்டமா அதிபர் சஞ்சய் பதிலளிக்க வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா, தன்மீது தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்பட்டுவந்த அழுத்தங்கள் மற்றும் உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாக, தனது பதவியையும், பொறுப்புகளையும் துறந்துள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கும்போது நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.