மட்டக்களப்பு கடற்பகுதியில் வைத்து 85 பேர் கடற்படையால் கைது

73 Views

கடல் வழியாக சட்டவிரோதமாக இலங்கையை விட்டு தப்பிச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 85 நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இன்று அதிகாலை மட்டக்களப்பு கடற்பகுதியில் கடல் ரோந்து நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 60 ஆண்களும், 18 வயதுக்கு மேற்பட்ட 14 பெண்களும், 11 இளம் பதின்ம வயதினரும் அடங்குவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மடு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் கடற்படை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை துறைமுக  காவல்துறையினரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர். அத்தோடு  அவர்கள் பயணித்த இழுவைப்படகும் கைப்பற்றப் பட்டுள்ளதாக கடற்படை  தெரிவித்துள்ளது.

Leave a Reply