இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியிருப்பதை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த 84 பேரின் சடலங்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
சுமார் 180 பணியாளர்களுடன் பயணித்த “ஐஆர்ஐஎஸ் டெனா” கப்பல் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், இதுவரை பின்வரும் விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
கடலில் மிதந்த 84 பேரின் சடலங்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். இவை மேலதிக பரிசோதனைகளுக்காக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
கப்பலில் இருந்த ஏனைய சுமார் 64 பேரின் நிலை குறித்து இதுவரை தகவல்கள் இல்லை. அவர்களைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.
இச்சம்பவம் பிராந்தியத்தில் ஒரு நேரடி யுத்தச் சூழலை உருவாக்கியுள்ள நிலையில், இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாடுகளின் அடுத்தகட்ட நகர்வுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன.



