ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று சனிக்கிழமை (20) கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தனியார் விடுதி “உங்கள் கருத்தைக் கைவிடாதீர்கள் – அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிக்க ஒன்றிணைவோம்” என்ற கருப்பொருளின் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டதையடுத்து ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்ட முதலாவது பொது நிகழ்வு இதுவாகும்.
இந்த நிகழ்வில் பல அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.