மழை மற்றும் கடும்காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் 735 குடும்பங்கள் பாதிப்பு

கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை மற்றும் கடும்காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் 735 குடும்பங்களைச் சேர்ந்த 2313 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் கடுமையான காற்று காரணமாக ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடொன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.