இறைமை என்றுமே பேச்சுப் பொருளாக்கப்பட இயலாதவொன்று என ஆட்சி செய்தமைக்காகப் பிரித்தானிய தேசமே திரண்டெழுந்து மதிப்பளிக்க தலைமைத்துவத்தின் சின்னமாக உலகமே திரண்டுவந்து போற்றிய இறுதியாத்திரையால் 2வது எலிசபேத் மகாராணி உலக மக்களின் அரசி என்பதை நிரூபித்துள்ளார்.
இரங்கல் வாரத்திலேயே இடம்பெற்ற அனைத்துலக ஜனநாயக நாளும் அமைதி நாளும் மகாராணி ஆட்சிக்காலத்தில் விரும்பிய அரசியல் விழுமியங்களை நடைமுறைப்படுத்த அழைத்தன மகாராணியின் உணர்ச்சி வசப்படாது உணர்வு பூர்வமாகச் சிந்தித்துச் செயலாற்றும் அரசியல் தன்மை இன்றைய அரசியல் தலைமைகளின் உடன்தேவை தேசப்பற்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற ஆட்சி மேலான உறுதியுமே உறுதியான அரசை உருவாக்கும் என வாழ்ந்த மகாராணி மாறுபாடுகளுக்கு வேறுபாடுகளுக்கு மதிப்பளித்துச் சமுகவிலக்கலைத் தவிர்த்து சமுக உள்வாங்கல்களை ஊக்குவித்தலே ஜனநாயக ஆட்சியையும் நாட்டின் இறைமையையும் பலப்படுத்தும் என தனதாட்சியால் வெளிப்படுத்தியவர் மகாராணி பிரித்தானிய அரசபரம்பரை வரலாற்றில் மிக நீண்டகாலமான 70 ஆண்டுகள் நாட்டின் இறைமையின் தலைமையாக விளங்கிய வரலாற்றுப் பெருமை காலமாகிய 2வது எலிசபேத் மகாராணி அவர்களுக்கு உரியதாக வரலாறு பதிவு செய்கிறது.
இவரையே ஐக்கிய இராச்சியம் என்னும் இங்கிலாந்துத் தேசம், இஸ்கொட்லாந்துத் தேசம், வேல்ஸ் தேசம், வடஅயர்லாந்து மாகாணப் பகுதி மக்கள் என்ற தனித்துவமான தேசியத்தன்மையுடைய தனியான தேசமக்கள் இனங்கள் தங்களின் பிரித்தானியர் என்ற ஒருமைப்பாட்டினது இணைப்புப் பாலமாக இதயன்பு செலுத்தினர். அத்துடன் தங்களின் ஒன்றிக்கப்ட்ட அரசுக்களாலான ஐக்கிய இராச்சியம் என்னும் நாட்டின் அரசின் இறைமையினதும் தேசிய பாதுகாப்பினதும் தலைமையாகக் கொண்டனர். பொதுவாக பிரித்தானிய முடிக்குரியவர் காலமானால் இலண்டன் பிரிஜ் உடைந்து விட்டது என்ற பூடகமொழியாலேயே முடிக்குரியவரை நியமிக்கும் பேரவைக்கு அறிவிப்பர். பேரவையின் தலைவர் மீண்டும் இலண்டன் பிரிஜ்ஜைக் கட்டுங்கள் என்ற பூடகமொழி வாயிலாகவே புதிய முடிக்குரியவரை நியமிப்பதற்கான ஆணையைப் பிறப்பிப்பது வழமை. இவ்வாறு இலண்டனில் உள்ள நாட்டின் முடித்தலைமை இங்கிலாந்து, வேல்ஸ், இஸ்கொட்லாந்து, வடஅயர்லாந்து மாகாணம் என்பற்றை இணைக்கும் இறைமைப்பாலமாகத் திகழவேண்டும் என்பது இந்த அரசமரபின் வழியான நோக்கு. இதனை செம்மையாக நிறைவேற்றி இந்த நான்கு தேச மக்களையும் பிரித்தானியக் குடிகள் என்ற தேசிய உணர்வுடன் 70 ஆண்டு காலமாக ஏற்பட்ட எத்தனையோ அரசியல் குமுறல்கள் கொந்தளிப்புக்கள் உலக மாற்றங்கள் அத்தனையையும் தனது தனிப்பட்ட ஆளுமையால் மாட்சிமைக்குரிய 2வது எலிசபேத் மகாராணி அவர்கள் மேற்கொண்டதாலேயே இதற்கான நன்றிப் பெருக்காக ஒன்றிக்கப்பட்ட இவ்அரசுக்களின் நாடான ஐக்கிய இராச்சிய மகக்ள் அனைவரும் கண்ணீர் பெருக்கி நெஞ்சுருகி எங்கள் மகாராணி என உரிமை கொண்டாடுகின்றனர்.
இது வாய்மொழியல்ல மக்கள் தீர்ப்பு என்பதை மகாராணி அவர்கள் காலமாகிய இஸ்கொட்லாந்தின் பல்மோர் அரண்மனையில் இருந்து படுத்தநிலையில் தொடங்கிய இஸ்கொட்லாந்து இங்கிலாந்து தேசங்களூடான வெஸ்ட்மினிஸ்ரர் பெருமண்டபம் நோக்கிய நீண்ட இறுதிப் பயணத்தில் வழியெங்கும் தரித்து மதிப்பளிக்க்பபட்ட இறைவழிபாடு செய்யப்பட்ட இடமெங்கும் காணப்பட்ட மக்கள் வெள்ளம் உறுதி செய்தது. இதனை மேலும் திடமாக உறுதி செய்யும் காட்சியாகவும் சாட்சியாகவும், வெஸ்ட்மினிஸ்ரர் பெருமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அவரின் படுத்தநிலை அரசமுடி வைக்கப்பட்ட இறுதியாத்திரைப் பேழைக்கு ஐந்து நாட்களாக 24 மணிநேரமும் ஒரே தேசமாகவே திரண்டெழுந்து 22 மணிநேரம் நீண்ட வரிசைகளில் காத்திருந்து மதிப்பளித்த மக்கள் பெருந்திரள் வரலாற்றுச் சான்றாகியுள்ளது.
மகாராணி முடிசூடிய 1952 முதல் காலமாகிய 2022 வரையான 70 ஆண்டுகளிலும் உலகின் போற்றுதற்குரிய அரசியல் தலைவியாகவும் மாட்சிமைக்குரிய 2வது எலிசபேத் மகாராணி அவர்கள் பெரும்புகழ் படைத்தமை இவரின் பிரிவால் உலகெங்கும் உள்ள மக்கள் கண்ணீர்விடுவதற்கான மூலகாரணமாக உள்ளது. 1952 முதல் 22.05. 1972இல் மகாராணி அவர்களின் பிரித்தானிய அரசால் 04.02.1948 இல் இலங்கை என்னும் நாட்டுக்குச் சுதந்திரத்தை வழங்கிய சோல்பரி அரசியலமைப்பின் 29(2) வது பிரிவு இலங்கை அரசாங்கம் சிறுபான்மை மதங்களுக்கோ இனங்களுக்கோ எதிரான சட்டங்களை இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றினால் மாட்சிமைதாங்கிய மகாராணியின் இலங்i சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்றம் வன்முறைப்படுத்தி ஈழத்தமிழ் மக்களை ஆளும் அரசியலமைப்புச் சட்டத் தகுதியற்ற சிங்கள பௌத்த சிறிலங்காக் குடியரசு என்னும் ஆட்சியை ஈழத்தமிழ் மக்கள் மேல் படைபலம் கொண்டு திணித்து அவர்களை அரசற்ற தேசஇனமாக்கும் வரை ஈழத்தமிழ் மக்களின் இறைமையின் இறுதி இருப்பாக 20 ஆண்டுகள் திகழ்ந்து ஈழத்தமிழர்களின் அன்பான அரசியாக வரலாற்றுப் பதிவு பெற்றார்.
மகாராணி காலமாகியதற்கான இரங்கல் உலகளாவிய நிலையில் இடம்பெறும் காலத்திலேயே ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக ஜனநாயக நாளும் அமைதி நாளும் செப்டெம்பர் 15 ம் செப்டெம்பர் 21ம் அமைந்து மகாராணி ஆட்சிக்காலத்தில் விரும்பிய அரசியல் விழுமியங்களான ஊடகச் சுதந்திரம், அமைதி என்பன குறித்தும் சிந்திக்க வைக்கிறது.
இவ்வாண்டுக்கான அனைத்துலக ஜனநாயக நாளின் மையக்கருத்தாக ‘ஜனநாயகத்திற்காக ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாப்போம்’ என்பது வைக்கப்பட்டுள்ளது. மாட்சிமைக்குரிய மகாராணி அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் ஊடகசுதந்திரத்தை முழுஅளவில் அனுமதித்த பெருமைக்குரியவர். இதனால் அவருடைய தனிப்பட்ட குடும்ப வாழ்வில் பல சிக்கல்களை எதிர் கொண்ட ந்pலையிலும் எந்த நேரத்திலும் ஊடகச் சுதந்திரத்தைத் தனது நாட்டில் மட்டுப்படுத்தாது பாதுகாத்தார் பிபிசி உலகளாவிய நிலையில் சுதந்திரத்துடன் பணிபுரியும் ஊடக நிறுவனமாக 1930கள் முதல் 90 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறப்பாகப் பணிபுரிவது பிரித்தானிய அரச குடும்பத்தின் ஊடகத்தில் தலையிடாக் கொள்கையின் வெற்றி எனலாம்.
உலகில் நிலைமை அவ்வாறாக இல்லை 85 வீதமான மக்கள் தங்கள் நாடுகளில் ஊடகச்சுதந்திரம் கடந்த ஐந்தாண்டுகளில் வீழ்ச்சி அடைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. யுனெஸ்கோவுடன் சேர்ந்து ஊடகவியலாளர்களுக்கான மத்திய மையம் வெளியிட்ட தகவலில் 125 நாடுகளைச் சேர்ந்த 714 பெண் ஊடகவியலாளரிடை நடத்திய கருத்துக் கணக்கெடுப்பில் 73 வீதமான பெண்கள் தாங்கள் ஒன்லைன் வன்முறைகளுக்கு வேலைநேரத்தில் உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இன்னொரு யுனெஸ்கோ ஆய்வின் படி ஊடகத்தில் பணிபுரியும் நான்கு பெண்களுக்கு மூவர் ஒன்லைன் வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர். ஒன்லைன் குறும்பர்கள் தகவல்கள் தரவுகள் செய்திகளை கொந்திவிடுவதும், சட்டவிரோதக் கண்காணிப்புக்களும் ஊடகவியலார்களுக்கு பெருந்தொல்லையாகத் தொடர்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் ஊடகவியலாளர்களை அவமதிப்பதும் உண்மைகளை மறைப்பதும் முன்னர் உள்ளது போலவே தொடர்கிறது. இதன் விளைவு மக்களுக்கு புனைவுகளில் இருந்து உண்மைகளை பிரித்தறிய முடியாத நிலை வருகிறது.
அத்துடன் படுபயங்கரமான வழிகளில் அவர்கள் திசைதிருப்பப்படுவதற்கும் இது உதவுகிறது. ஊடகச் சுதந்திரம் இல்லாமல் உண்மையான ஜனநாயகச் சமுகத்தை உருவாக்க முடியாது. ஊடகச் சுதந்திரம் இல்லாமல் சுதந்திரம் என்பதே கிடையாது. ஆனால் இந்த உண்மைகள் மறக்கப்பட்டு வருகின்றன என்பதை யுனெஸ்கோவின் மற்றொரு தரவின் படி அறிகின்றோம். 2016க்கும் 2021க்கும் இடைப்பட்ட ஐந்தாண்டுகளில் 455 ஊடகவியலார்கள் கொன்றழிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது.
ஆட்சியில் இருப்பவர்கள் வெளிப்படையாகவும் பொறுப்புடனும் தாம் நடந்து ஊடகவியலாளர்களுக்கு செய்திகளையும் தரவுகளையும் தகவல்களையும் எடுக்க அனுமதித்தாலே ஊடகச்சுதந்திரம் நடைமுறைச் சாத்தியமாகும். யுத்தப்பிரதேசங்களில் முரண்பாடுகள் உள்ள இடங்களில் கடமைபுரியும் ஊடகவியலாளர்கள் குண்டுகளுக்கு எறிகணைகளுக்கு அஞ்சுவதை விட வெளிவிடப்படும் தவறான செய்திகள் தரவுகள் தகவல்களாலேயே பெரிதும் பாதிப்படைகின்றனர்.
எண்மத் தொழில்நுட்பம் ஜனநாயகத்திற்கான பாதையாக அமைந்தாலும் அது எதிர்நோக்கும் சவால்களும் அபாயங்களும் அளப்பரியன. அத்துடன் எண்மத் தொழில்நுட்பமே பல ஒடுக்குமுறைகளும் துஸ்பிரயோகங்களும் வளர்ச்சி பெறவும் காரணமாகின்றன.
இந்நிலையில் ஊடகங்கள் உண்மையைப் பேசி சக்தியளிப்பதையும், பொய்மைகளை வெளிப்படுத்துவதையும், உறுதியான மீண்டெழும் ஆற்றலுள்ள நிறுவனங்களையும் சமுதாயங்களையும் உருவாக்கும் கடமையினையும் ஊடகங்கள் செய்ய இயன்றதை செய்ய உறுதி பூண இந்த அனைத்துலக ஜனநாயக நாள் அழைக்கிறது. இது மகாராணியின் காலமானதலுக்கான துக்க வாரத்தில் இடம்பெறுவது அவர் போற்றிய ஊடகச் சுதந்திரத்தை மக்கள் தொடர அவரின் வாழ்வின் முன்னுதாரணம் அழைக்கும் செயலாக அமைகிறது.
அவ்வாறே மகாராணி அவர்களின் இறுதியாத்திi நிறைவுறும் செப்டெம்பர் 19க்கு இருநாட்களுக்குப் பின்னர் செப்டெம்பர் 21இல் அனைத்துலக அமைதி நாள் இடம்பெறுகிறது. இவ்வாண்டுக்கான மையக் கருவாக ‘ இனவெறியை ஒழிப்போம் – அமைதியைக் கட்டியெழுப்புவோம்’ என்பது உள்ளது.
மாட்சிமைக்குரிய மகாராணியின் மறைவு குறித்த ஆபிரிக்கத் தலைவர்களின் செய்தியில் ஆபிரிக்க மக்களுக்கு பிரித்தானியாவில் தீங்கெதுவும் செய்யாதவர் மகாராணி என்பது பலமுறை சுட்டிக்காட்டப்பட்டது. சமுகத்திலும் அரசியலிலும் மாற்ற முடியாத தொடர் மனிதக் குற்றமாக இது இருந்தாலும் மகாராணி அவர்கள் தனது ஆட்சிப்பிரதேசத்தில் இதனை ஒழிப்பதற்கான பல செயல்களைச் செய்துள்ளார்.
சமத்துவமின்மைக்கு எதிராகப் போராடுங்கள. இனவெறிக்கெதிராகப் போராடுங்கள் என்பது மகாராணியின் அரசின் அழைப்பாக மட்டும் அமையாது இனவெறியை எதிர்த்துப்பேராடி அமைதியை வளர்க்கக் கூடிய முறையில் சட்டப்பாதுகாப்புத் தரும் சட்டங்களும் காலத்துக்குக் காலம் உருவாக்கப்பட்டே வருகின்றன.
இது இலங்கையில் இனவெறிக்கு மதவெறிக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு அவர்கள் மகாராணிக்குச் செய்யும் உண்மையான மீள்மதிப்பளிப்பு சிறிலங்காவின் ஈழத்தமிழின அழிப்பு அரசியல் பொருளாதார சமுக ஆன்மிக முயற்சிகளுக்கு எதிராக ஒன்றுமையுடன் போராடுவதாகவே அமையும் எனலாம். அமைதி என்பது போரில்லாத வறுமையில்லாத அறியாமையில்லாத முரண்பாடுகள் இல்லாத நோயில்லாத இழப்புக்கள் பிரிவுகள் இல்லாத நிலையில்லை. மாறாக எந்தச் சூழ்நிலையிலும் அதன் தாக்கம் எமது வாழ்வுக்கான உறுதியைப் பாதிக்க விடாது அவற்றை எதிர்கொண்டு அவற்றை வெல்லுவதற்கான முயற்சிக்கான நம்பிக்கையயாக உள்ளது.
அமைதிக்கான இந்த வரைவிலக்கணத்தின் முன்மாதிரி வாழ்வாக அமைந்தது மாட்சிமைக்குரிய மகாராணியின் பெருவாழ்வு. மகாராணியின் உணர்ச்சி வசப்படாது உணர்வு பூர்வமாகச் சிந்தித்துச் செயலாற்றும் அரசியல் தன்மை இன்றைய அரசியல் தலைமைகளின் உடன்தேவையாக உள்ளது. அவரின் தேசப்பற்றும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற ஆட்சி மேலான உறுதியுமே உறுதியான அரசை உருவாக்கும் என்பதை உலகுக்கு உறுதி செய்தது. அவர் மாறுபாடுகளுக்கு வேறுபாடுகளுக்கு மதிப்பளித்துச் சமுகவிலக்கலைத் தவிர்த்துச் சமுக உள்வாங்கல்களை ஊக்குவித்தலே ஜனநாயக ஆட்சியையும் நாட்டின் இறைமையையும் பலப்படுத்தும் என வாழ்ந்து காட்டிய மகாராணி இந்தத் தலைமைத்துவ ஆளுமையே உலக மகாரணியாக உலக மக்கள் மனதில் அவர் என்றும் வாழும் மரணமற்ற பெருவாழ்வை அவருக்கு அளித்துள்ளது.
இறுதியாக ஈழத்தமிழர்களின் மகாராணியாக மாட்சிமைக்குரிய 2வது எலிசபேத் அவர்கள் விளங்கிய காலத்து ஈழத்தமிழர்களின் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளையும் பதிவுசெய்வது அவரின் காலத்து உலக வரலாற்றில் ஈழத்தமிழர் அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களை உலகு அறிய உதவும்.
1952இல் மாட்சிமைக்குரிய மகாராணி அவர்கள் முடிசூடும் பொழுது சுதந்திரம் பெற்ற இலங்கையின் முதல் அரசாங்கமான ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் மலையகத் தமிழ் மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் சட்டங்களை நிறைவேற்றி மனித உரிமைகளை வன்முறைப்படுத்தி, பாராளுமன்றத்தில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாது ஒழித்து அதன் வழி சிங்களப் பிரதிநிதித்துவத்தைப் பெருக்கிச் சிங்கள பௌத்த பாராளுமன்றக் கொடுங்கோன்மை ஆட்சி தோன்ற வழிவகுத்திருந்தது.
இந்நேரத்தில் மலையக மக்கள் சார்பாக பிரித்தானிய பிரிவிக் கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்யப்பட்ட போதிலும் மலையக மக்களை தொழிலுக்கு வந்த மக்களாகப் பார்க்க முடியுமே தவிர அரசியல் அலக்காகக் கருதி அவர்களுக்கு சோல்பரி அரசியலமைப்புப் பாதுகாப்பை அனுமதிக்க இயலாது என்ற சட்ட நுணுக்கத்தைச் சிங்கள் அரசு எதிர்வாதமாக வைத்து அதனை முறியடித்தது. இந்த அபாயம் ஈழத்தமிழ்களுக்கு ஏற்படக் கூடாதென்பதை உறுதிப்படுத்தவே ஈழத்தமிழரின் இறைமையை மீள்உருவாக்கம் செய்யும் வகையில் அகில இலங்கைத் தமிழரசுக்கட்சி என்ற ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சி தந்தை செல்வநாயகம் அவர்களால் தொடங்கப்பெற்றது.
அமரர் ஜி. ஜி. பொன்னம்பலம் இலங்கைத் தீவின் தேச உருவாக்கம் அரசஉருவாக்கத்தில் தமிழர்களுக்கு சிங்களர்களுக்குச் சமானமான பங்களிப்பு உண்டு என 50க்கு 50 கோரிக்கையை முன்வைத்து தமிழர்களின் இறைமையின் சமத்துவத்தை வலியுறுத்தும் கட்சியாக அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரசை முன்னெடுத்தார்.
இந்த இருதலைவர்களும் இலங்கையில் தமிழர்களின் இறைமையின் இருப்பை உலகுக்கு காலத்துக்கு ஏற்ற அரசியல் மொழி மூலம் தெளிவாக்கினர். ஆயினும் இவர்கள் பிரித்தானிய மகாராணியிடம் இதுகுறித்து ஏன் நேரடி முறையீடுகளை செய்து அவரின் தலையீட்டை ஊக்குவிக்கவில்லை என்பது கேள்விக்குரியாகவே உள்ளது.
ஒருவேளை ஜி ஜி பொன்னம்பலம் அவர்கள் சோல்பரி கமிஷனுக்குச் சமர்பபித்த இலங்கைத் தமிழ் மக்களின் இறைமையின் தொன்மையின் தொடர்ச்சி தொடர்பான அறிக்கைகளும் குறிப்பாக இந்தியாவுக்கு அரசியல் நிர்ணய சபையை நியமித்தது போல இலங்கையில் செய்யாத பிரித்தானியாவின் தவறைச் சுட்டிக் காட்டியமையும் இலண்டனுக்கு அப்பொழுது இருந்த மகாராணியின் தந்தை அரசர் மாட்சிமைக்குரிய 6வது ஜோர்ஜ் அவர்களைச் சந்தித்து தமிழர்களின் உண்மை நிலைகைளை விளக்க வந்த ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களைச் சந்திக்க அனமதிக்காததும் பின்னர் அகில இலங்கைத் தமிழ்ககாங்கிரசின் பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியம் அக்காலத் தொழிற்கட்சியின் பிரதமர் அட்லி அவர்களுக்கு சிறுதேசிய இனங்களின் தன்னாட்சி உரிமையை உலகெங்கும் ஏற்புடைமை செய்யும் தொழிற்கட்சி இலங்கைத் தமிழர்களின் தன்னாட்சி உரிமையையும் ஏற்க வேண்டும் எனச் சமர்ப்பித்த அறிக்கைக்கு உரிய தகுதி யளிக்க்படாததும் இலங்கையில் திருகோணமலையில் பிரித்தானியக் கடற்படையின் டாக்டராக விளங்கிய தமிழகத்தின் வடஆரக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ் பொன்னையா யாழ்ப்பாண அரசின் மக்களாகவே காலனித்துவ ஆட்சி ஏற்பட்ட பொழுதிருந்த ஈழத்தமிழ் மக்களை தனியான அரசியல் அலாகாக் கருதி அவர்களுக்கு தன்னாட்சி வழங்கி யாழ்ப்பாண தேசத்தை இந்திய இலங்கை உறவுக்கான பாலமாகப் பயன்படுத்தும் படி சான்றாதாரங்களுடன் சமர்ப்பித்த அறிக்கையை பிரித்தானிய அரசு கவனத்தில் கொள்ளாது விட்டதும், இலண்டனில் இருந்த இலங்கைக்குக் கொடுக்கவேண்டிய நிதியாக பெருந்தோட்டப்பயிர்களின் விற்பனை வழி திரண்டிருந்த ஸ்டேர்லிங் சேமிப்பை டி எஸ் சேனநாயக்கா திருப்பதித்தராது தங்களுக்குச் சாதகமான முறையில் சோல்பரி அரசியலமைப்பை வடிவமைக்கும் படி கேட்டதற்குப் பிரித்தானியக் காலனித்துவ அவலுவலகம் இணங்கியதும், தமிழ்த்தலைமைகள் பிரித்தானியா மேல் நம்பிக்கை இழந்திருந்ததன் காரணமாக மாட்சிமைக்குரிய மகாராணி அவர்களிடம் அவர் ஆட்சிப் பொறப்பேற்ற பின்னர் தங்கள் கோரிக்கைளை முன்வைக்காமல் விட்டார்களா என்பது விடை காணப்பட வேண்டிய கேள்வியாக உள்ளது.
அத்துடன் 1948 முதல் 1956 வரை சோவியத் இரஸ்யா இலங்கையின் இறைமையின் மீயுயர் நிலை மாட்சிமை தாங்கிய மகாராணி அவர்களின் பிரித்தானிய அரசிடமே உள்ளதென்பதால் இலங்கையை ஐக்கிய நாடுகள் சபையில் தனிநாடாக உறுப்புரிமை வழங்க அனமதிக்க முடியாது என இருதடவை தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்தமை மகாராணி அவர்களே தமிழர்களின் இறைமைக்கும் சிங்களர்களின் இறைமைக்குமுரிய இலங்கை அரசாங்கத்தின் இறைமையாளராக 1948க்குப் பின்னரும் தொடர்;நதார் என்பதை உலகுக்கு உறுதி செய்தது.
சுதந்திர இலங்கையில் மகாரணி பெயரளவு தலைவியாக மட்டுமல்லாது இறைமையின் மீயுயர் நிலையாகவும் இருந்த காலத்திலேயே புpரித்தானிய ஆட்சி;க்காலத்தில் தொடங்கப் பெற்ற கல்லோயா நீர்ப்பாசனத் திட்டத்தைத் பின்னைய மகாவலிகங்கையை வடக்கே திருப்பும் திட்டத்துக்கான ஆரம்ப செயற்திட்டங்களையும் சிங்களக் குடியேற்றங்களை தென்தமிழீழத்தில் ஏற்படுத்தவும், யாழ்ப்பாணக் குடாநாட்டின் எல்லைக் கிராமங்களில் விவசாயத்துக்கு காணிவழங்கல் என்ற பெயரில், சிங்களக் காடையர்களைக் குடியேற்றவாசிகளாக ஆயுதப்படுத்திக் குடியேற்றி தமிழீழத்தாயகத்தின் குடிமக்கள் தொகையினை வன்முறைப்படுத்திச் சிங்களத் தேர்தல் தொகுதிகள் கிழக்கிலும் குடாநாட்டின் எல்லைக் கிராமங்களிலும் தோன்றவும் வைத்து இலங்கைப் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவப் பலத்தைக் குறைத்து சட்டவாக்கம், சட்ட அமுலாக்கம், நிர்வாகம் என்னும் மூன்று வலுக்களிலும் சிங்கள பௌத்த மேலாண்மை ஆட்சி;யை உறுதி செய்தனர். மீன்வளப் பிரதேசங்களிலும் கடல்படு பொருளாதாரம் சிறிப்பாக இருந்த தமிழரின் துறைமுகநகரங்களிலும் சிங்களக் குடியேற்றத்தை மணல்வாரியாகப் பரப்பி ஏழைத் தமிழ் விவசாய மீனவ சமுகங்களின் வாழ்வாதரங்களைச் சிதைத்து தமிழர் தாயகத்தின் பொருளாதார வளர்ச்சியை மட்டுப்படுத்திச் சிங்களப் பொருளாதார எழுச்சியாகச் சுரண்டல் செய்தனர்.
இந்த நில ஆக்கிரமிப்புக்கள் பொருளாதரச் சுரண்டல்களை எண்ணிக்கையில் குறைவான மக்கள் தொகையினரான தமிழர்கள் சனநாயக வழிகளில் எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை முறியடிக்கச் சிங்களம் மட்டும் சட்டத்தையும் பௌத்த நாடு என்ற அரசியற் கொள்கையையும் 1952 இல் ஜே. ஆர. ஜயவர்த்தனா களனி ஐக்கிய தேசியக்கட்சி மாநாட்டில் முன்மொழிய அதனையே தனது சிங்கள மக்கள் ஆதரவைப் பெறும் உத்தியாகக் கையாண்ட எஸ் டபிள்யூ.ஆர் டி பண்டாரநாயக்கா நிறைவேற்றி அரசியல் தலைமையானார்.
இந்தச் சட்டங்கள் வழி தமிழர்கள் அரசில் வேலை பெறும் உரிமை மறுக்கப்பட்டு அவர்களின் பொருளாதாரம் நசுக்கப்பட்டதும் அல்லாமல் தமிழர் தாயகங்களுக்கு வெளியே வாழ்ந்த தமிழ் மக்களின் சொத்துக்களைச் சூறையாடி அவர்களை இனஅழிப்புச் செய்து அவர்களின் நிலங்களையும் தொழில் வளங்களையும் ஆக்க்pரமித்துச் சுரண்டும் சிங்களப் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களையும் அரச ஆதரவு பெற்ற சிங்களக் காடையர்கள் வழியாகவும் படைபல அரசபயங்கரவாதத்தின் மூலமும் 1956 முதல் 1958 1977 என 1983 ஆடி ஈழத்தமிழின அழிப்பு வரை சிங்கள அரசாங்கங்கள் வேகப்படுத்தின.
1965இல் ஐக்கிய தேசியக் கட்சி தனது கல்வி அமைச்சரான ஐ. எம். ஆர். ஏ இரியக்கொல்லiயால் பல்கலைக்கழகத் தரப்படுத்தல் தொடக்கி வைக்கப்பட்டு தமிழ் இளைஞர்களின் கல்வி வேலைவாய்ப்புக்கள் மோசமாகப் பாதிப்புக்குள்ளான போது முதலாவது மாணவர் பேரவை யாழ்ப்பாணத்தில் தொடங்கப் பெற்று தமிழ் இ ளைஞர்களின் அரசியல் ஈடுபாடு தொடங்கியது. அவ்வாண்டிலேயே பலாலி இராணுவ முகாமும் தொடர்ந்து காரைநகர் வல்வெட்டித்துறை மாதகல் காங்கேசன்துறைப் பகுதிகளில் கடற்படை தளங்களும் பரவலாக்கப்பட்டன.
இவ்வாறு ஆயுதப்படைபலம் கொண்டு தமிழ் இளைஞர்களின் அரசியல் விழிப்புணர்வை ஒடுக்கும் காலத்திலேயே அடையாள அட்டை வழங்கலும் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே 1970களில் ஸ்ரீலங்காச் சுதந்திரக்கட்சியின் கல்வி அமைச்சர் அல்ஹாஜ் பதியூதீன் முகம்மத்தால் வேகபப்டுத்தப்பட்டு தமிழ் மாணவர்களின் உயர்கல்வி உயர் தொழில்நுட்ப பயிற்சி உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டு இளந்தமிழ் சமுதாயம் பிரித்தானியாவுக்கு கல்விக்காகவும் வேலைப்பயிற்சிக்காகவும் தொழில்நட்பகல்விக்காகவும் பெருமளவில் வரும்நிலை உருவாகியது.
இந்தக் காலகட்டத்தில் தான் 1962இல் சிங்களம் மட்டும் சட்டத்தால் வேலை இழந்த கோடீஸ்வரன் பிரித்தானிய பிரிவிக்கவுன்சிலில் தொடர்ந்த வழக்கில் 7 ஆண்டுகளின் பின்னர் சிங்களம் மட்டும் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என அவருக்கு மீளவும் வேலையை வேலைநீக்கம் செய்யப்பட்ட காலத்துக்கான சம்பளத்துடன் வழங்குமாறு தீர்ப்பு வழங்கியதும் அல்லாமல் சிங்களம் மட்டும் சட்டத்தை மீளப்பெற்று அரசியலமைப்புச் சட்டத்துக்கு அமைவானதாகத் திருத்தி மீள்சமர்ப்பிக்க வேண்டுமென இலங்கைப் பாராளுமன்றத்தை நெறிப்படுத்தியது. இதனை அப்பொழுது இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் டட்லி சேனநாயக்கா செயற்படுத்தாது விட 1970இல் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் இடதுசாரிக் கூட்டணி அரசாங்கம் சோல்பரி அரசியல் அமைப்பை வன்முறைப்படுத்தி 22.05. 1972இல் சிங்கள பௌத்த குடியரசு பிரகடனப்படுத்தபட்டு மாட்சிமைக்குரிய மகாராணி அவர்களிடம் இருந்த சிங்கள இறைமையைச் சிங்களவர்கள் தமதாக்கினர்.
மாட்சிமைக்குரிய மகாராணி அவர்களிடம் இருந்த ஈழத்தமிழர் உடைய இறைமை ஈழத்தமிழரிடமே மீண்டு விட்டது என்பதைத் தெளிவுபடுத்திய அன்றையத் தமிழர் தலைவர் செல்வநாயகம் அவர்கள் இலங்கைப் பாராளுமன்றத்தில் 1975 இல் தன்னாட்சிப்பிரகடனம் செய்ய 1977 இல் ஈழத்தமிழ் மக்கள் அதனை குடியொப்பத்தின் மூலம் அங்கீகரித்து அதனை சனநாயக வழிகளில் அடைவதை சிறிலங்கா ஏற்காது விட்டால் வேறெந்த வழியிலும் அடைவோம் என எடுத்த உறுதி மொழியின் அடிப்படையில் 1978 முதல் 2009 வரை தமிழீழ தேசத்தில் நடைமுறை அரசை தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் நடைமுறைப்படுத்தி அதற்கான உலக அங்கீகாரத்தை எதிர் நோக்கிய நிலையில் 2009 முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு என்னும் 21ம் நூற்றாண்டின் மிகக் கொரூரமான இனஅழிப்பைக் ஹிட்லரிசத்தையும் மிஞ்சிய வகையில் சிறிலங்கா நிகழ்த்தி தனது ஈழத்தமிழர் தாயகத்தின் மீதான ஆக்கிரமிப்பையும் சுரண்டலையும் மீள்உறுதி செய்து இன்று வரை தொடர்கிறது.