இந்தியாவுக்கு சட்ட விரோதமாக செல்ல முற்பட்ட 7 பேர் கைது

மன்னார் பேசாலை  பகுதியில் இருந்து கடல்  வழியாக சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் செல்ல முற்பட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெரியவர்கள் மற்றும் நான்கு சிறுவர்களை  மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

இதையடுத்து குறித்த மூவரையும் தலா 50,000 ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு  நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஒரு மாத காலப்பகுதியில் 60க்கும் மேற்பட்டோர் கடல்  வழியாக   தமிழகத்தில் அகதிகளாக  தஞ்சம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamil News

Leave a Reply