7பேர் விடுதலை குறித்த ஆளுநரின் முடிவு இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்பு

175 Views

முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை தொடர்பாக ஆளுநர் தரப்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான இறுதி முடிவு எடுக்கும் ஒப்புதல்  தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்த ஒப்புதல் குறித்து ஆளுநர் 7 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் ஆளுநர் அலுவலக அலுவலர் மத்திய அரசைச் சந்தித்து ஏழுபேர் விடுதலை குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து ஏழுபேரின் விடுதலை குறித்த முக்கிய அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply