மட்டக்களப்பில் இதுவரையில் 65024 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன- மருத்துவர் நா.மயூரன்

IMG 0534 மட்டக்களப்பில் இதுவரையில் 65024 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன- மருத்துவர் நா.மயூரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 65024 தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  மருத்துவர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 79 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப் பட்டுள்ளதுடன் மூன்றாவது அலையில் 6356 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை  தெரிவித்துள்ளார்.

இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 79 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப் பட்டுள்ளனர். அவர்களில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேரும், செங்கலடி பகுதிகளில் 14 பேரும், களுவாஞ்சிகுடியில் 11பேரும், ஏறாவூர், வாழைச்சேனை, காத்தான்குடி ஆகிய பகுதிகளில் தலா 06 பேரும், பட்டிப்பளை, ஆரையம்பதி போன்ற பகுதிகளில் தலா மூன்று பேரும், கிரான், ஓட்டமாவடி பகுதிகளில் தலா ஒருவரும் இனங்காணப் பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 7339 கோவிட்  தொற்றாளர்கள் இனங்காணப் பட்டுள்ளதுடன் 100பேர் மரணமடைந்துள்ளனர். தொடர்ந்தும் 946பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூன்றாவது அலையில் இதுவரையில் 6356 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 91பேர் மரணமடைந் துள்ளனர். கடந்த மாதம் 3387 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் கடந்த வாரம் 593 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மூன்று கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப் படுத்தலிலிருந்து இன்று முதல் விடுவிக்கப் படவுள்ளது. மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மாமாங்கம் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது.

மூன்றாம் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 50ஆயிரம் கோவிட் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றன. அதில் 370024 தடுப்பூசிகள் இதுவரையில் வழங்கப் பட்டுள்ளன. இரண்டாம் கட்ட தடுப்பூசியானது 14981பேருக்கு ஏற்றப் பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 12000 ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களில் 7000 பேருக்கு கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 மட்டக்களப்பில் இதுவரையில் 65024 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன- மருத்துவர் நா.மயூரன்