6 இந்திய ட்ரோலர்களுடன், 35 மீனவர்கள் அதிகாலை நெடுந்தீவு பகுதியில் கைது

466 Views

நெடுந்தீவு பகுதியில் கைது
லங்கை கடற்பரப்பிற்குள் அத்து மீறி உள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு இந்திய ட்ரோலர் மீன்பிடி படகுகளை நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடற்படையினர் கைப்பற்றினர். இதன்போது 35 மீனவர்களும் நெடுந்தீவு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களின் 6 படகுகளிலும் மொத்தமாக 35 மீனவர்கள் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்படுவதனால் அனைவரும் கைது செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது தென்னரசு, லியோன், பீட்டர், கருப்பைய்யா,பினால்டன் ஆகியோர் செலுத்திச் சென்ற படகுகளே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது. 

இதன்போது கைது செய்யப்பட்ட படகுகளில் 5 படகுகள் மயிலிட்டித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு 1 படகு தற்போது கொண்டு வரப்படுகின்றது.

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad 6 இந்திய ட்ரோலர்களுடன், 35 மீனவர்கள் அதிகாலை நெடுந்தீவு பகுதியில் கைது

Leave a Reply