மதுசாரப் பாவனையால் தினமும் 50 பேர் இறப்பு!

மதுப்பாவனை காரணமாக, இலங்கையில் தினமும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் என்று போதைப்பொருள் தடுப்பு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆதலால். மதுப்பாவனையைக் கட்டுப்படுத்த எதிர்வரும் பட்ஜெட்டில் நட வடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் போதைப்பொருள் தடுப்பு மையம் மேலும் தெரிவித்ததாவது:-

இலங்கையின் போதைப்பொருள் பாவனை அதிகரித்துச் செல்கின்றது. இலங்கையில் ஏற்படும் மரணங்களில் 83 வீதமானவை தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. குறிப்பாக, மதுப்பாவனையால் தினமும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். ஒரு வருடத்தில் அண்ணளவாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். எனவே, மதுசாரப் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேசிய ரீதியிலான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் மதுசாரங்கள் மீதான வரியை கணிசமாக அதிகரிப்பதன் மூலம் இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும் என்றார்.