5 மாதங்களில் 46 துப்பாக்கிச் சூட்டு…

இவ் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 46 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

46 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 31 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலுடன் தொடர்புடையவை.  இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 100 க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட 41 துப்பாக்கிகளை காவல்துறையினர்  கைப்பற்றியுள்ளனர். இவற்றில் 27 கைத்துப்பாக்கிகள், ரி-56 ரக 14 துப்பாக்கிகள் என புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.