சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் 49 பேர் கைது

103 Views

சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேரை இலங்கை கடற் படையிர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் குச்சவெளி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும்  அவர்களை இன்றைய தினம் திருகோணமலை நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் வல்வெட்டித்துறை கடற்பரப்பு ஊடாக படகில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொண்டமனாறு பகுதியில் இருந்து சட்டத்துக்குப் புறம்பாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் குறித்த நான்கு பேரை இராணுவத்தினர் கைது செய்து வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்த கைது நவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த இருவரும் திருகோணமலையைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காணமாக மக்கள் நாட்டைவிட்டு ஆபத்தான கடல் வழிப் பணயத்தை மேற்கொண்டு இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு தஞ்சம் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply