தமிழகத்தில் தஞ்சமடைந்த 4 இலங்கையர்கள்

4 இலங்கையர்கள் இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
ராமேஸ்வரம் கடற்பரப்பில் வைத்து இந்திய கடலோர காவல் படையினரால் குறித்த நால்வரும் மீட்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த இரண்டு மகன்களுடன் தாயும் தந்தையும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  மீட்கப்பட்ட சிறுவர்கள் இருவரும் 5 மற்றும் 9 வயதுடையவர்களாவர்.
அவர்கள் அனைவரும் ஏற்கனவே இந்தியாவில் தஞ்சமடைந்திருந்த நிலையில் 2019ஆம் ஆண்டு இலங்கைக்கு திரும்பியிருந்தனர்.

இந்நிலையில் தற்போது அவர்கள் அனைவரும் திருவண்ணாமலை பகுதியில் உள்ள அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து இதுவரையில் 320 இலங்கையர்கள் இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.