3000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்களை பேச வைக்கும் விஞ்ஞானிகள்

எகிப்தில் கி.மு 1099 – 1069 காலகட்டத்தில் வாழ்ந்த நெஸ்யமன் என்ற மதகுருவின் மம்மியை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மதகுரு என்பதால், பாடல்கள் பாடுதல் உள்ளிட்ட மதச் சடங்குகளை அவர் செய்திருப்பார். இதனால், அவரது குரல் வலிமையானதாக இருந்திருக்கும் என மானுடவியல் ஆய்வாளர்கள் கருதினர். இதனையடுத்து அவரின் குரலை செயற்கைக் குரல் வயையங்களைக் கொண்டு உருவாக்க மருத்துவர்கள் குழு முயற்சி மேற்கொண்டது.

அதன்படி, நெஸ்யமன்னின் பேச்சுக் குழல் ஸ்கான் செய்யப்பட்டு, முப்பரிமாண அமைப்பில் செயற்கையாக உருவாக்கப்பட்டது. செயற்கை பேச்சுக்குழல் மற்றும் குரல்வளை அமைப்பைக் கொண்டு, மருத்துவர்கள் நெஸ்யமன்னின் குரலை தற்போது உருவாக்கியுள்ளனர். இது சமூகவலைத்தளங்களில் பிரபல்யமாகி வருகின்றது.

இதேபோல், ஐரோப்பாவில் உள்ள நீண்ட மலைத் தொடரான, ஆல்ப்ஸ் மலைத் தொடரில், 5,300 ஆண்டுகள் பழமையான மம்மி கிடைத்துள்ளது. அதை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், கடந்த ஆண்டு அதற்கு குரல் வளையை உருவாக்கினர். அதைப் பேசச் செய்தனர். அதன் பேச்சு, தமிழ் மொழியை ஒத்திருந்ததால் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.hghghfg 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்களை பேச வைக்கும் விஞ்ஞானிகள்