2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்களால் 2,692 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் 2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 2,545 வீதி விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி காவல்துறை அதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
காவல்துறை ஊடகப் பிரிவில் இன்று திங்கட்கிழமை (29) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே காவல்துறை போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி காவல்துறை மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்களால் 2,692 பேர் உயிரிழந்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டில் அதிகளவான வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் வீதி விபத்துக்கள் 272 ஆக அதிகரித்துள்ளதுடன் உயிரழப்புக்களின் எண்ணிக்கை 317 ஆக உயர்வடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



