சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 23 மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் மற்றும் கடலோர காவல்படையினர் ஜனவரி 14 முதல் 19 வரை உள்ளூர் கடல் பகுதியை உள்ளடக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 23 மீனவர்கள் , ஐந்து டிங்கி படகுகள் மற்றும் ஒரு இழுவைப் படகு ஆகியவற்றுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, திருகோணமலையில் உள்ள ஜெயநகர், தக்வநகர், காலி அகுரல, பலப்பிட்டி மற்றும் யாழ் நெடுந்தீவு, பருத்தித்துறை கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கிய இந்த நடவடிக்கைகளின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், வெடிபொருட்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி படகுகள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புல்முடை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை, நெடுந்தீவு பொலிஸ் நிலையம், பருத்தித்துறை மீன்வள ஆய்வு அலுவலகம், காலி மற்றும் பேருவளை கடலோர காவல்படை அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டன.



