கடந்த 3 மாத காலப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 22 பேர் பலி

04. 2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 22 பேர் பலியாகினர்.

இந்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 27 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் அதிகளவான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் கடந்த ஜனவரி மாதத்திலேயே பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக மன்னார் நீதிமன்ற வளாகத்தில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை உட்பட ஜனவரி மாதத்தில் மாத்திரம் 11 பேர் கொல்லப்பட்டனர்.

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் பெரும்பாலானவற்றுக்கு போதைப் பொருள் வர்த்தகமே காரணமாக அமைந்துள்ளது
இறுதியாக நேற்று முன்தினம் மாத்தறை தேவேந்திரமுனை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கும் போதைப் பொருள் வர்த்தகமே காரணமென பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.