2022ல் இலங்கையை விட்டு வெளிநாட்டு சென்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2022ஆம் ஆண்டில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகத்தில் பதிவு செய்து தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு சென்றோர் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றில் அதிகளவானோர் வெளிநாடுகளுக்கு தொழிவாய்ப்புகளுக்காக இந்த வருடத்திலேயே சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.