கோவிட் தொற்றுக்கு மத்தியிலும் இவ்வருடத்தில் 120,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வேலை வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் அமைச்சு தெரிவித்துள்ளது.
கட்டாருக்கு 30,000 பேரும், சவுதி அரேபியாவுக்கு 27,000 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 20,000 பேரும், தென் கொரியாவுக்கு 1,400 பேரும், சிங்கப்பூருக்கு 1,100 பேரும், சைப்ரஸிற்கு 1,600 பேரும், ஜப்பானிற்கு 800 பேரும் சென்றுள்ளனர்.