இரண்டு விளம்பரங்களை பார்த்தேன் 1983 கறுப்பு யூலையின் நினைவும், நீதிக்கான அழைப்பும் என்ற தலைப்பிட்டு நந்தன வீரரத்தன வின் சிங்கள மொழியிலான புத்தகத்தை மனோ ரஞ்சனின் தமிழ் மொழிபெயர்பில் கடந்த வியாழன் 2025 செப்டம்பர் 09 ல் கொழும்பு மகாவலி மைய கேட்போர் கூடத்திலும், இன்று சனிக்கழமை 2025 செப்டம்பர் 11ல் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கிலும் ஜனநாயக உரிமைக்கான மக்கள் ஒன்றியம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
இதில் சிந்திக்க வேண்டியது இரண்டுவிட யங்கள் முதலாவது 42 வருடங்கள் கடந்து 1983 கறுப்பு யூலை நினைவு நிகழ்வில் ஜே வி பி செயலாளர் ரில்வின் சில்வா கலந்து உரையாற்று வது.
இரண்டாவது யாழ்ப்பாணத்தில் நடைபெ றும் நிகழ்வில் ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணி செயலாளர் சுகு எனப்படும் சிறிதரன் தலைமை தாங்குவது.
ஈபிஆர்எல்எவ் பத்மநாப அணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம் கிடைக்காத நிலையில் 2010ல் தமிழ் சமூக ஜனநாயக கட்சி என்று பெயரை வரதராஜப்பெருமாள் தலைமையிலான பத்மநாபா ஈபிஆர்எல்எவ் அணி மாற்றியது அதன் செயலாளர் சுகு சிறிதரன்.
புத்தகங்கள் எழுதுவது வெளியிடுவது எல்லாம் நல்ல விடயம் புத்தக வெளியீட்டில் “நீதிக்கான அழைப்பு” என விளம்பரங்களில் குறிப்பிட்டுள்ளது யாரிடம் யார் நீதிகேட்பது இனப்படுகொலைகளுக்கான நீதி என்பது சர்வதேசத்தை நோக்கியதாகவே கடந்த 16 வருடங்களாக ஈழத்தமிழர்களின் ஒருமித்த குரலாக இருக்கும் வேளையில் 1983 கறுப்பு யூலைக்கு 2025 ல் உள்நாட்டில் நீதி கேட்க இவர்கள் யார் .?
மாகாணசபை தேர்தல் கிடப்பில் போட ப்பட்ட நிலையில் மீண்டும் அடுத்த வருடம் மாகாணசபை தேர்தல் இடம்பெறும் என தற் போதைய அரசில் உள்ள அமைச்சர்கள் கதை கூறும் நிலையில் 1983 கறுப்பு யூலை புத்தக வெளியீடும் அதில் கலந்து கொள்ளும் தலைமை தாங்கும் கட்சி உறுப்பினர்களையும் பார்க்கும் போது மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் முன் ஏற்பாடாகவும் இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.
வரதராஜப்பெருமாளும் அண்மையில் அக் கரைப்பற்றில் தேசிய காங்கிரஷ் கட்சி தலைவர் அதாவுல்லாவுடனும்,யாழ்ப்பாணத்தி ல் தமிழரசுக் கட்சி பதில் செயலாளர் சுமந்திரனுடனும், மட் டக்களப்பில் அவருடைய பழைய தோழர் தற் போது தமிழர் மகாசபை கட்சி தலைவர் த. கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் தனித்தனியாக நின்று படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் காட்டப்பட்டதும் மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் அறிகுறிதான்.
இணைந்த வடகிழக்கு மாகாணசபையின் 1988ல் முதலமைச்சராக இருந்த வரதராஜப் பெரு மாளுடன் செயல்பட்ட சுகு எனப்படும் சிறிதரன் 42, வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் நடந்த கறுப்புயூலை இனப்படுகொலை நினைவு நிகழ் வில் யாழ்ப் பாணத்தில் தலைமைதாங்கி உரை யாற்றுகிறார்.
கொழும்பில் நடந்த நிகழ்வில் மட்டும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே வி பி) கட்சியின் செயலாளர் அதாவது தற்போதைய தேசிய மக்கள் சக்தி கட்சியின் தீர்மானங்களை, கொள்கைகளை வகுக்கும் செயலாளர் ரில்வின் சில்வாவும் உரையாற்றுகிறார்.
1983 யூலைக்கலவரம் என்பது கொழும்பு தலைநகரிலும், தென்பகுதிகளில் சில இடங் களிலும் உள்ள தமிழ் மக்களை திட்டம் இட்டு இனப்படுகொலை செய்த கொடூர படுகொலை களாகும். 1983 யூலை 24 இரவு, தலைநகர் கொழும் பில்தமிழர்களுக்கு எதிரான கலவரம் தொடங்கியது, பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. ஏழு நாட்களில், முக்கியமாக சிங்களக் கும்பல்கள் தமிழரைத் தாக்கின, உயிருடன் எரித்தன, படு கொலைகள் புரிந்தன, உடமைகளைக் கொள் ளையடித்தன. இறப்பு எண்ணிக்கை 400 முதல் 3,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது, 150,000 பேர் வீடற்றவர்களாயினர். ஏறத்தாழ 8,000 வீடுகளும், 5,000 வணிக நிறுவனங்களும் அழிக்கப் பட்டன. இக்கலவரத்தின் போது ஏற்பட்ட மொத் தப் பொருளாதாரச் செலவு பத்தாயிரம் கோடி என மதிப்பிடப்பட்டது. பன்னாட்டு நீதித் துறை வல்லுநர்கள் ஆணையம் என்ற அரச-சார்பற்ற அமைப்பு 1983 டிசம்பரில் வெளியிட்ட அறிக்கை யில் இப்படுகொலைகளை ஒரு இனப்படுகொலை என்று விவரித்தது.
அப்போது ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர் த்தனா எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 1983 யூலை 27ல் ரூபவாகினி தொலைக்காட்சியில் தோன்றிய ஜே.ஆர் ஜெயவர்தன பாதிக்கபட்ட தமிழ் மக்களுக்கு எந்தவித அனுதாபமும் தெரிவிக்காமல் கடந்த சில நாட்களாக நடைபெற்ற அசம்பாவிதங்கள் சிங்கள மக்களது இயல்பான மன உணர்வுகள் எனக் கருத்து வெளியிட்டார். இதைத் தொடர்ந்து 1983 யூலை 29 விடுதலைப் புலிகள் கொழும்புக்கு வந்துவிட்டார்கள் என்ற வதந்தி பரப்பப்பட்டது. அன்றைய தினம் மேலும் பல தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.
அந்த இனப்படுகொலைகளுக்கு ஜே வி பி உட்பட எந்த சிங்களக் கட்சிகளும் கண்டனங் களையோ, அனுதாபபங்களையோ தெரி தெரிவிக் கவில்லை, சர்வதேச நாடுகள், தமிழ் தலை வர்கள் என பலருடைய அழுத்தம் காரணமாக 1983 இல் இடம் பெற்ற இனக்கலவரத்தைப் பற்றிய ஒரு விசாரணையை அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் அரசாங்கம் ஒரு ஆணைக்குழுவை நியமித்தது. இக்குழுவானது கண்டி, கொழும்பு, யாழ்ப்பாணம் என்று எல்லா இடங்களுக்கும் சென்று விசாரணையை நடாத்தியது.இதன் பின்னர் உப்புச் சப்பற்ற ஒரு அறிக்கையை அக்குழு வெளியிடப்பட்டது. கலவரம் நடந்ததற்கான பின்புலம் எதுவும் கூறப்படாத நிலையில் இது நடந்தது, இப்படி நடந்தது அதற்கான நட்ட ஈடுகளை வழங்கத்தான் வேண்டும் என்ற வகையில் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டது.எனினும் அரசாங்கத்தின் ஆதரவால் இடம்பெற்ற விடயங்களை ஆணைக்குழு சொல்லத் தவறி விட்டது.
ஆணைக்குழுக்களும் அரசின் முகவர் குழுக்களாகவே செயற்பட்டன. என்பதற்கு இது நல்ல உதாரணமாகும்.
இப்போது 42 வருடங்கள் கடந்து கோமா வில் இருந்து எழும்பிய நிலையில் 83 கறுப்பு யூலை தொடர்பாக புத்தக வெளியீடும், நீதி கேட்கும் அழைப்பும் விடப்பட்டு தற்போது ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் தாய்க்கட்சியான ஜே வி பி கட்சியின் ரில்வின் சில்வாவும் நீதிகேட்க வெளிக்கிட்டுள்ளார்.
ஈழத்தமிழர்களுக்கும். இலங்கைத்தமிழர் களுக்கும்.இலங்கையின் வரலாற்றை எடுத்துக் கொண்டால் 1956, 1958, 1960, 1981, 1983, 1986 ,2009, என்று காலத்துக்குக் காலம் இனப்படுகொலைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.அண்மைகாலத் திலும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை தொடர்ந்தே செல்கிறது.
இலங்கையில் ஆட்சியில் இருந்தவர்கள், இருப்பவர்கள் எவருமே இனப்படுகொலைகளுக்கு உள்நாட்டு பொறிமுறை மூலம் நீதி கிடையாது என்ற அறுதியான முடிவை கடந்த 70, வருடங்களாக மாறி மாறி ஆட்சி செய்த சிங்கள தலைவர்களிடம் இருந்து தமிழ் மக்கள் கற்றுக்கொண்ட பாடம் அதுவாகும்.
அதனால்தான் சர்வதேச நீதியை கடந்த 16, வருடங்களாக ஜநா மனித உரிமை ஆணைக்குழுவிலும், சர்வதேச நாடுகளிடமும் வலியுறுத்திவருகின்றனர்.
2024,செப்டம்பர்,21ல் ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுரா தெரிவாகி 2024, நவம்பர்,14, பாராளுமன்ற தேர்தலில் 159, மிக அதிகப்படியான ஒரு கட்சி அரசாங்கத்தை நிறுவிய பின்னர் ஞானம் பிறந்தது போன்று இப்போதுதான் உள்ளாட்டு பொறிமுறை மூலம் இனப்படுகொலைக்கான நீதியும், தீர்வும் வழங்குவதாக கூறுகின்றனர்.
அதிலும் 42, ஆண்டுகளுக்கு முன்னர் 1983, யூலை படுகொலைக்கு சிங்கள குண்டர்களுடன் இணைந்து தமிழர்களை கொன்றுகுவித்தமைக்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜேவிபி கட்சிக்கும் பங்கிருந்தது.
கறுப்பு யூலை வன்செயல்களுக்காக ஜனாதி பதி ஜெயவர்தனவோ அல்லது அன்று பிரதமராக இருந்து பிறகு ஜனாதிபதியாகவும் வந்த ரணசிங்க பிரேமதாசவோ அல்லது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் முக்கியமான பதவிகளில் இருந்த அரசியல்வாதிகளில் எவருமோ அல்லது ஜேவிபி கட்சியை சேர்ந்தவர்களோ தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவித்ததில்லை.
ஆனால் 1994, ல் ஜனாதிபதியாக தெரிவான சந்திரிகா 2004, ம் ஆண்டு காலப்பகுதியில் என நினைக்கிறேன் 20, ஆண்டுகள் கடந்து 1983, கறுப்பு யூலை இனப்படுகொலைக்கு சாட்டுப்போக்காக ஒரு தடவை மன்னிப்புக் கோரினார். வேறு எந்த சிங்கள கட்சித்தலைவர்களும் மன்னிப்பு கோர வில்லை.
2015, ல் நல்லாட்சியில் முட்டுக்கொடுத்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பை திருப்திப்படுத்து வதற்காககூட ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் 2024, ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக்கட்சி சுமந்திரன் அணி ஆதரித்த சஜீத்பிரமதாசாவும் மன்னிப்பு கோரவில்லை, தேசியமக்கள் சக்தி அரசின் ஆட்சி ஒருவருடம் எட்டும் நிலையில் தற்போது இவ்வாறான நாடகங்கள் அரங்கேற்றப் படுவதை காணலாம் சோழியன் குடும்பி சும்மா ஆடாது மாகாணசபை வேட்பாளர்கள், முதல மைச்சர்கள், என பலருக்கு இப்போது ஆசை பிறந்துள்ளது அதற்காக பல படங்களும் நாடகங் களும் காட்டியே ஆக வேண்டும் அதில் ஒன்றுதான் இவ்வாறான காட்சிகள்.